CRIME
மேகமலை தீர்ப்பால் வந்த கொடூரம்!.. பெண் எடுத்த ‘அதிர்ச்சி’ முடிவு.. தேனியை உலுக்கிய சம்பவம்..!!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு, தேனி மாவட்டத்தில் பெரும் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி வன எல்லையைப் பாதுகாப்பது அவசியமாக இருந்தாலும், அங்கு தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் 98 கிராம மக்களின் மறுவாழ்வு குறித்தோ, அவர்களின் பாரம்பரிய உரிமைகள் குறித்தோ தீர்ப்பில் போதிய தெளிவு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 9 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், இந்தச் சட்டப் சிக்கலைத் தமிழக அரசு எப்படி கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பின் கொடூரமான விளைவாக, காந்திகிராமம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த நதியா (37) என்ற பெண் கடுமையான மனவேதனையடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலை முயற்சியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், தங்களின் வாழ்விட உரிமைகளைப் பாதுகாக்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுக்கச் செய்துள்ளது.
