LATEST NEWS
நீங்க அதை செஞ்சா புத்திசாலி CM… இல்லன்னா பதவியை ராஜினாமா செய்வீங்களா..? முதல்வர் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் சவால்..!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை கடன் வாங்காமல் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கினால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை ‘புத்திசாலி முதலமைச்சர்’ என ஏற்றுக்கொள்வதாக அதிமுக மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியின்படி, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை புதிய தவெக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு எக்காரணம் கொண்டும் மேலும் கடன் வாங்கக் கூடாது என்று ஆர்.பி. உதயகுமார் நிபந்தனை விதித்துள்ளார். மேலும், ஏழை எளிய பெண்களுக்கான இந்த நிதி உதவியை தவெக அரசு உயர்த்தி வழங்கத் தவறினால், முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறாரா என்றும் அவர் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, தமிழகத்தின் முந்தைய கடன் சுமை அதிகமாக இருப்பதாகக் காரணங்களை அடுக்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி நெருக்கடியைக் காரணம் காட்டிவிட்டு, மறுபுறம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய ஆடம்பரக் கார்கள் வழங்குவது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
