LATEST NEWS
ஸ்டாலின் மட்டுமில்ல.. அவங்க அப்பா கருணாநிதியே நின்னாலும் தோற்கடிச்சிருப்பேன்… வெறும் 5 நிமிஷம் தான்… கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேச்சு…!!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திமுக மற்றும் அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
தேர்தல் களத்தில் தான் போட்டியிட்டபோது, தனக்காகப் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வந்ததாகவும், ஆனால் அந்த 5 நிமிடங்களிலேயே கொளத்தூர் தொகுதி முழுவதும் தவெக அலை வீசித் தனது வெற்றி அப்போதே உறுதியாகிவிட்டது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் விஜய் மட்டும்தான் என்றும் அவர் தனது உரையில் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வி.எஸ்.பாபு, தேர்தலில் தன்னை எதிர்த்து மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது தந்தை (முன்னாள் முதல்வர் கருணாநிதி) நின்றிருந்தாலும் அவர்களைத் தான் தோற்கடித்திருப்பேன் என அதிரடியாகக் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடமில்லை என்றும், இனி தவெக மட்டும்தான் தமிழ்நாட்டை ஆளும் என்றும் அவர் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
