LATEST NEWS
“FINE கட்டுங்க சார்..!”… ஆளுங்கட்சி எம்.எல்.ஏ- வை நடுரோட்டில் மறித்த போலீஸ்.. சட்டசபைக்கு பைக்கில் வரும்போது நேர்ந்த கதி.. பரபரக்கும் பின்னணி..!!
புதுச்சேரி அரசால் தங்களுக்கு அரசு கார்கள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படாததற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகவே அவர் இந்த நூதனமான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் சட்டமன்றத்திற்கு வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை மற்றும் அவர் பாதுகாப்பு விதிகளின்படி ஹெல்மெட் அணியவில்லை. போக்குவரத்து விதிமீறல்களைக் கவனித்த புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையினர், சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்பதை உணர்த்தும் வகையில், எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
