CRIME
அடிப்பாவி..! கள்ளக்காதலனை வீட்டில் பார்த்த புருஷன்… கழுத்தை நெரிச்சு கொன்னுட்டு விபத்துன்னு டிராமா போட்ட கொடூர மனைவி..! என்சிஎல் அதிகாரி மரணத்தில் திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் சக்திநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கின் உண்மையை காவல்துறை கண்டறிந்துள்ளது. என்சிஎல் பீனாவில் மூத்த ஓவர்மேனாக பணியாற்றி வந்த ரமாசங்கர் மிஸ்ரா என்பவரை, அவரது மனைவி தனது கள்ளக்காதலன் மற்றும் அவனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இந்தச் சம்பவத்தை விபத்து போலக் காட்டுவதற்காக, சடலத்தைச் சாலை ஓரமாக வீசிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் உயிரிழந்தவரின் மனைவி பிரியங்கா மிஸ்ரா, அவளது கள்ளக்காதலன் விகாஸ் சவுகான் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஆகஸ்ட் 23 அன்று பீனா மைதானம்-ஜம்ஷீலா சாலையில் ரமாசங்கர் மிஸ்ராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் இது சாலை விபத்து போல் தோன்றினாலும், சம்பவ இடத்தின் சூழல் மற்றும் உடலிலிருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் மொபைல் இருப்பிடங்களை ஆய்வு செய்தபோது, பிரியங்கா மிஸ்ராவிற்கும் விகாஸ் சவுகானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆகஸ்ட் 22 இரவு, அவர்கள் இருவரையும் வீட்டில் ரமாசங்கர் நேரில் பார்த்ததால் ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து ரமாசங்கரின் கழுத்தை நெரித்தும், தலையைத் தரையில் மோதியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கொலையை மறைப்பதற்காக விகாஸ் தனது நண்பர்களான அனுராக் சிங் மற்றும் சோனு குப்தா ஆகியோரையும் இதில் இணைத்துக் கொண்டான். நான்கு பேரும் சேர்ந்து சடலத்தைப் போர்வையில் சுற்றி, சாலை ஓரமாகக் கொண்டு சென்று வீசியதோடு, ஏதோ வாகனம் மோதி இறந்ததைப் போலக் காட்டுவதற்காகச் சடலத்தின் மீது வாகனத்தைக் ஏற்றவும் முயன்றுள்ளனர். இருப்பினும், தொழில்நுட்ப சான்றுகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் இக்கொலை வழக்கின் முடிச்சவிழ்த்து, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் கைது செய்து மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
