திடீர் ட்விஸ்ட்.. தனி மரமானதால் ‘மாம்பழத்தை’ குறி வைக்கும் ‘சூரியன்’…. பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அறிவாலயம் போட்ட மாஸ் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் ட்விஸ்ட்.. தனி மரமானதால் ‘மாம்பழத்தை’ குறி வைக்கும் ‘சூரியன்’…. பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அறிவாலயம் போட்ட மாஸ் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!!

Published

on

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதற்கட்டமாக, சென்னை பனையூரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு திமுக தரப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நேரடியாகச் சென்று ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வலுவான கூட்டணியை அமைக்கும் நோக்கில் திமுக இந்த அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பாமக பல ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்நீடித்து வந்த போதிலும், இதுவரை அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் எவ்வித இடமும் ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடர் புறக்கணிப்பு காரணமாகப் பாமக தலைமை கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், தற்பொழுது திமுக தரப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளதால் திமுக பக்கம் சாயலாமா என்று அன்புமணி ராமதாஸ் தீவிர யோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் கூட்டணி மாற்றக் பேச்சுவார்த்தை தமிழக NDA மற்றும் அரசியல் களத்தில் புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in