CRIME
“அய்யோ கொடுமையே..! நீட் தேர்வில் பாஸாகியும் கிடைக்காத மருத்துவ சீட்..!” நெல்லை மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஸ்ருதி லயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கலந்தாய்வின் முதற்கட்டப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த ஸ்ருதி லயா, எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். தனது இரண்டாவது முயற்சியில் அவர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்ததால், இந்த முறை தனது டாக்டர் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்துள்ளார்.
இருப்பினும், மருத்துவக் கலந்தாய்வின்முதற்கட்ட இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் அவரது பெயர் பட்டியலிடப்படாததால், தனக்கு மருத்துவச் சீட் கிடைக்காது என்று எண்ணி அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். நீண்ட நாட்களாகத் தான் ஆசைப்பட்ட டாக்டர் கனவு கலைந்துவிட்டதாக நினைத்து மனமுடைந்த மாணவி, வேறு வழியின்றி தனது வீட்டிலேயே விபரீத முடிவை எடுத்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தேர்ச்சி பெற்றும் சீட் கிடைக்காத ஏக்கத்தில் மருத்துவக் கனவோடு இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
