அலெர்ட்..! டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால்.. அமைச்சர் விக்னேஷ் பகிரங்க எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அலெர்ட்..! டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால்.. அமைச்சர் விக்னேஷ் பகிரங்க எச்சரிக்கை..!!

Published

on

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஆகஸ்ட் 31) சட்டப்பேரவையில் எச்சரித்துள்ளார் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க விற்பனை ரசீது வழங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும், தவறு செய்யும் பணியாளர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் உறுதியளித்தார்

மேலும், கள்ளச்சாராய உற்பத்தியை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார் . இதன் மூலம் தமிழகத்தில் கள்ளச்சாராய நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், எல்லையோர கண்காணிப்பை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in