CRIME
அடிப்பாவி..! “80 லட்ச ரூபாய், தங்கம் எங்கே..?” ஆசை காட்டிய சொத்து.. மாமனாரை போட்டுக் தள்ளிய சொந்த மருமகள்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்… இரண்டரை மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்..!!
டெல்லி ரோகிணி செக்டார்-3 பகுதியில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்ற பணத்தில் வாங்கிய தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக, சொந்த மருமகளே தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மாமனாரைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ராகேஷ் கண்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை நடந்த இரண்டரை மணி நேரத்திற்குள் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, திட்டமிட்ட மருமகள் சிம்ரன், அவரது காதலன் ஹிமான்ஷு மற்றும் கொலையாளிகளான சிராங்க், பாரஸ் ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொலை செய்ய திட்டமிட்ட சிம்ரன், ராகேஷ் கண்ணாவின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் திட்டமிட்டு ஒரு திருவிழாவைப் பார்க்க வெளியே அனுப்பியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு, வீட்டின் பிரதான பூட்டைத் திறக்கச் செய்து சிராங்க் மற்றும் பாரஸ் ஆகிய இருவரையும் வீட்டிற்குள் அனுப்பியுள்ளார். அந்த நேரத்தில் சிம்ரனும் அவரது காதலனும் கட்டிடத்தின் கீழே நின்று கொண்டு யாரும் வருகிறார்களா என கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கும்பல் தனியாக இருந்த ராகேஷ் கண்ணாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளது.
கொலையாளிகள் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றினர், ஆனால் ராகேஷ் கண்ணா பெரும்பாலான தங்கத்தை முன்பே ரகசிய இடத்தில் மறைத்து வைத்ததால் அவர்களுக்கு வெறும் 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மட்டுமே கிடைத்துள்ளன. திருவிழா முடிந்து வீடு திரும்பிய ராகேஷ் கண்ணாவின் மனைவி, கணவர் மயங்கிக் கிடப்பதையும் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
