LATEST NEWS
#BREAKING :அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் உயிரிழப்பு… காலையிலேயே அதிர்ச்சி..!!
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதியதில், இறையன்பு (29) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடந்துள்ளது. அமைச்சர் தனது அரசு வாகனத்தில் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவருக்குச் சொந்தமான மாருதி கார் பின்னால் தொடர்ந்து வந்துள்ளது. அப்போதுதான் இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்ததாக சன் நியூஸ் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
