அடப்பாவி நீயும் ஒரு அப்பன் தானே..! “ரகசிய அறையில் நடந்த கொடுமை” இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி வந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பர்னிச்சர் கடை ஓனரின் பகீர் லீலைகள் அம்பலம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவி நீயும் ஒரு அப்பன் தானே..! “ரகசிய அறையில் நடந்த கொடுமை” இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி வந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பர்னிச்சர் கடை ஓனரின் பகீர் லீலைகள் அம்பலம்..!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், பர்னிச்சர் கடை உரிமையாளர் ரகசிய அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டைக்காடு பாரதி நகரைச் சேர்ந்த ரிக்சன் மனோ ஜோஸ் (53) என்பவர் ‘அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து, அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி இங்கு பகுதி நேர வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி மாணவி வேலைக்குச் சென்றிருந்தபோது, மதிய நேரத்தில் தனது கண்ணுக்குச் சொட்டு மருந்து விடுமாறு கூறி ரிக்சன் மனோ ஜோஸ் அவரை கடையின் உள்பகுதியில் இருந்த தனி அறைக்கு அழைத்துச் சென்று கதவை மூடியுள்ளார். பின்னர் தனது செல்போனில் சில வீடியோக்களைக் காண்பித்து, அதுபோல தனக்கு மசாஜ் செய்யுமாறு மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி சத்தமிட்டு அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்து, தனது பெற்றோருடன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

மாணவியின் புகாரின் பேரில் ரிக்சன் மனோ ஜோஸைக் கைது செய்த போலீசார், அவரது செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் இதே பாணியில் கடையில் வேலைக்கு வரும் பெண்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறுவதையும், தனது விருப்பத்திற்கு இணங்குபவர்களுக்குக் கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் அவரது கடையில் பணியாற்றிய 4 முன்னாள் பெண் ஊழியர்களை அழைத்து விசாரித்தபோது, அவர்களும் தங்களின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜோஸ் தகாத முறையில் நடந்துகொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜோஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in