“அப்போதே கைது செய்திருந்தால் விஜய் வளர்ந்திருப்பாரா..? திமுகவை நோக்கிப் பாய்ந்த திருமாவளவனின் மரண சவுக்கடி.. பதறும் கோட்டை வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்போதே கைது செய்திருந்தால் விஜய் வளர்ந்திருப்பாரா..? திமுகவை நோக்கிப் பாய்ந்த திருமாவளவனின் மரண சவுக்கடி.. பதறும் கோட்டை வட்டாரம்..!!

Published

on

தருமபுரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தாங்கள் பதவிக்காகக் கூட்டணி மாறவில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என்றும் விரிவாகப் பேசியுள்ளார். கடந்த 2016 மற்றும் 2024 தேர்தல் காலகட்டங்களில் தங்களை வற்புறுத்தியோ அல்லது பல்வேறு அரசியல் சூழல்களாலோ கூட்டணியை விட்டு வெளியேற்ற முயற்சிகள் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இருந்து பிரிந்தது போன்ற நல்லிணக்கமின்மை காரணமாகவே தற்பொழுது விசிகவும் பிரிந்து சென்றுள்ளதாகத் தெரிவித்தார். “ஆட்டுப்பட்டியை இடையில் ஒருவர் வந்து திறந்துவிட்டால் ஆடுகள் வெளியே போகத்தான் செய்யும், அந்த ஆட்டுப்பட்டி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?” எனத் தங்களின் வெளியேற்றத்திற்குத் திமுகவே முழுப் பொறுப்பு என்று சாடினார்.

மேலும் தமிழக அரசியல் களம் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்தும் பேசிய திருமாவளவன், கரூர் சம்பவத்தின்போது விஜய் மீது திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதாகக் குற்றம் சாட்டினார். “அப்போதே விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்திருந்தால் தற்பொழுது விஜய் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பாரா? அதற்கு யார் காரணம், திமுகதானே?” என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். தனது நீண்டகால அரசியல் பயணம், பிரபாகரனுடனான சந்திப்புகள் மற்றும் தேர்தல் வரலாறு ஆகியவற்றை நினைவுகூர்ந்த திருமாவளவன், தமிழக அரசியலில் அடுத்ததாக யார் வர வேண்டும், யாருடன் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விசிகவே இருக்கும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in