CRIME
“இது என்ன கொடுமை..” அரசு காப்பகத்தில் 9-ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த அவலம்.. 3 காமக்கொடூரர்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் போலாவரம் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த கொடூர சம்பவத்தில், மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலேயே அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு விடுதி என்ற பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே மாணவிக்கு இந்த நேர்ந்திருப்பது, பழங்குடியின மாணவிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியையும், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையைத் முடுக்கிவிட்ட அதிகாரிகள், முதற்கட்ட நடவடிக்கையாக விடுதி மற்றும் பள்ளி ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு காப்பகங்கள் மற்றும் விடுதிகளில் இதுபோன்ற அவலங்கள் தொடராமல் இருக்க, தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான கண்காணிப்பு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
