LATEST NEWS
அமைச்சர் பதவிக்காக வேறு கூட்டணிக்கு மாறிட்டீங்க.. இதானே உண்மை..? இதுல எங்களை ஏன் இழுக்குறீங்க..? கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்..!!
அமைச்சர் பதவி கிடைத்ததால் வேறு கூட்டணிக்கு விசிக மாறிவிட்டது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியை விமர்சித்துள்ளார். தேமுதிகவிற்கு திமுக 10 தொகுதிகளை ஒதுக்கியதை விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பிரேமலதா இந்த அதிரடி பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“இதுதானே உண்மை? இதில் எதற்காக தேமுதிகவை இழுக்கிறீர்கள்?” என்று பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் நலக் கூட்டணி அமைந்தபோது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட திருமாவளவன், தற்போது தேமுதிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை விமர்சிப்பது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
