இவனை சும்மாவிடக்கூடாது..! மிரட்டி மிரட்டியே சிறுமியை சீரழித்த கூலித் தொழிலாளி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தர்மபுரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இவனை சும்மாவிடக்கூடாது..! மிரட்டி மிரட்டியே சிறுமியை சீரழித்த கூலித் தொழிலாளி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தர்மபுரியை உலுக்கிய கொடூரச் சம்பவம்..!!

Published

on

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 16 வயதுடைய 12-ம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியின் மகளான அந்த மாணவி, வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற கூலி தொழிலாளி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்த மாணவியை முருகன் முதன்முதலில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, விஷயம் வெளியில் தெரிந்தால் விபரீதம் ஆகிவிடும் என மாணவியை மிரட்டி, அவர் தனியாக இருக்கும் நேரங்களிலெல்லாம் தொடர்ந்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பள்ளி மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டு பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் நிலைகுலைந்து போன சிறுமியின் பெற்றோர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மகளிர் போலீசார், கூலி தொழிலாளி முருகன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in