LATEST NEWS
“துரோகி வெளியே போ..” தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… பாதியில் நின்ற பரப்புரை..!!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமா, தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு திரண்ட பொதுமக்கள் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொகுதி மக்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதுடன், “சத்யபாமா ஒழிக.. துரோகி வெளியே போ..” என்று ஆவேசமாக முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் இந்தத் தொடர் எதிர்ப்பினாலும், வாக்குவாதத்தினாலும் தவெக வேட்பாளர் சத்யபாமா தனது தேர்தல் பரப்புரையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளருக்கு எதிராகத் தொகுதி மக்கள் திரண்டு முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
