“5 முறை தொலைந்த iPhone 16 Pro”.. 5 முறையும் நடந்த அதிசயம்… ஜப்பான் மக்களின் நேர்மையைக் கண்டு வியந்துபோன இந்தியப் பெண்… இணையத்தில் வைரலாகும் சுவாரசியப் பதிவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“5 முறை தொலைந்த iPhone 16 Pro”.. 5 முறையும் நடந்த அதிசயம்… ஜப்பான் மக்களின் நேர்மையைக் கண்டு வியந்துபோன இந்தியப் பெண்… இணையத்தில் வைரலாகும் சுவாரசியப் பதிவு..!

Published

on

ஜப்பானில் வசித்து வரும் பிரகதி என்ற இந்தியப் பெண், தனது விலைமதிப்பற்ற ஐபோன் 16 புரோ போனை அடுத்தடுத்து 5 முறை தவறவிட்டும், அது ஒவ்வொரு முறையும் பத்திரமாகத் தனது கைக்கே திரும்ப வந்த சுவாரசியமான சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நள்ளிரவு நேரத்தில் அவர் தனது போனை தொலைத்தபோது, ‘Find My’ செயலி மூலம் தேடிச் சென்று பார்த்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாராவது எடுத்திருப்பார்கள் என்று பயந்தவருக்கு, அவர் தவறவிட்ட அதே இடத்திலேயே அந்த போன் யாருடைய கரங்களும் படாமல் அப்படியே இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரகதிக்கு ஜப்பானில் போன் தொலைவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் காவல் நிலையம், காய்கறி சந்தை மற்றும் இரண்டு முறை ஆடை மாற்றும் அறைகளில் அவர் தனது போனை தவறவிட்டுள்ளார். ஆனால், அங்குள்ள மக்களின் நேர்மையால் அந்த 4 முறையும் அவரது போன் அவரிடமே பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய வியக்கத்தக்க பாதுகாப்பும், நேர்மையும் உலகிலேயே ஜப்பானில் மட்டும்தான் சாத்தியம் என்று அவர் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்தச் சம்பவம் தனிநபரின் நேர்மையை மட்டும் வெளிப்படுத்தாமல், ஜப்பானில் தொலைந்துபோகும் பொருட்களை மீட்கும் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும் உலகிற்குக் காட்டியுள்ளது. டோக்கியோ பெருநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 48 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொலைந்த 1.44 லட்சம் மொபைல் போன்களில், சுமார் 1.19 லட்சம் போன்கள் உரிய உரிமையாளர்களிடம் மிகச் சரியாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in