“ஃப்ரீ… ஃப்ரீ… எல்லாமே ஃப்ரீ..!” பழைய தங்கம் கொடுத்தா புது தங்கம் இலவசம்.. கவர்ச்சி திட்டத்தை நம்பி ஏமாந்த பெண்கள்… பல கோடி நகைகளுடன் முதலாளி எஸ்கேப்.. திடுக்கிடும் பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

“ஃப்ரீ… ஃப்ரீ… எல்லாமே ஃப்ரீ..!” பழைய தங்கம் கொடுத்தா புது தங்கம் இலவசம்.. கவர்ச்சி திட்டத்தை நம்பி ஏமாந்த பெண்கள்… பல கோடி நகைகளுடன் முதலாளி எஸ்கேப்.. திடுக்கிடும் பின்னணி…!!

Published

on

தலைநகர் டெல்லியின் லட்சுமி நகர் பகுதியில், பழைய தங்க நகைகளுக்குப் பதிலாக எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி புதிய தங்க நகைகளைத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் நகைக்கடை அதிபர் ஒருவர் ஒரே இரவில் கடையைக் காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆன துணிகர மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லட்சுமி நகரில் புதிதாக நகைக்கடை ஒன்றைத் தொடங்கிய அந்த நபர், “உங்களுடைய பழைய தங்க நகைகளைக் கொடுத்தால், அதற்கு நிகரான புதிய தங்க நகைகளை எவ்வித சேதாரம் அல்லது கூலி கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்” என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார். இதனை நம்பிய அப்பகுதிப் பெண்கள் பலர், தங்களது லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அந்த நபரிடம் புதிய நகைகளுக்காக ஒப்படைத்துள்ளனர். ஆனால், ஒட்டுமொத்த நகைகளையும் சுருட்டிக்கொண்ட அந்த நபர், ஒரே இரவில் கடையை முழுமையாகக் காலி செய்துவிட்டு ‘ஒன்பது இரண்டு பதினொன்று’ என காற்றோடு காற்றாக மறைந்துள்ளார்.

நகைகளைக் கொடுத்துப் பல நாட்கள் ஆகியும் கடையிலிருந்து எந்தவொரு அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் நேரில் சென்று பார்த்தபோது, கடை முற்றிலும் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதுகுறித்து லட்சுமி நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு புகார் அளித்தும், தலைமறைவான அந்தப் பகல் கொள்ளையனைப் பற்றி எந்தவொரு தடயமும் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், “இந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என அதிரடியாக அறிவித்துள்ளனர். இந்த உலகத்தில் எதுவும் இலவசமாகக் கிடைக்காது என்பதை உணராமல், பேராசையால் மக்கள் ஏமாறுவதைப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுக்காரர்கள் எந்த எல்லைக்கும் துணிந்து விடுகிறார்கள் என்பதற்கு இந்த மெகா தங்கம் மோசடியே சான்றாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in