“நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. வீட்டின் முன்னே விளையாடிய 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை.. அப்புறம் என்னாச்சு தெரியுமா..? பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“நெஞ்சை பதறவைக்கும் காட்சி.. வீட்டின் முன்னே விளையாடிய 5 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை.. அப்புறம் என்னாச்சு தெரியுமா..? பரபரப்பு சம்பவம்..!!

Published

on

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், தாயின் கண்முன்னே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனைச் சிறுத்தை ஒன்று கவ்விச் செல்ல முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிலாளி குருசாமியின் மகனான தீட்சிதன் என்ற 1-ம் வகுப்பு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து அவனது தலையைக் கடித்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. இதைப் பார்த்த சிறுவனின் தாய் நாகஜோதி மற்றும் அருகில் இருந்த ரமேஷ் என்ற தொழிலாளி ஆகியோர் மரண பயத்தில் போட்ட சத்தத்தால், சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டுப் புதிருக்குள் ஓடி மறைந்தது.

சிறுத்தையின் கொடூரத் தாக்குதலால் காது மற்றும் தலையில் பலத்த காயமடைந்து தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால், முதலுதவிக்குப் பின் அச்சிறுவன் தீவிர சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவத்தைத் தொடர்ந்து வனச்சரக அதிகாரியின் உத்தரவின் பேரில் வனவிலங்கு மோதல் தடுப்புப் படையினர் அந்தப் பகுதியில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தைகளைத் தனியாக வெளியே விளையாட விட வேண்டாம் என்றும், எஸ்டேட் நிர்வாகத்தினர் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in