“இது என்ன கொடுமை.. நொடியில் பறிபோன 22 வயது கனவு..” வாடகை பைக்கில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்ன கொடுமை.. நொடியில் பறிபோன 22 வயது கனவு..” வாடகை பைக்கில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

டெல்லியில் கல்லூரிப் படிப்பை முடித்து, எதிர்காலம் குறித்து பல்வேறு கனவுகளுடன் வாழ்ந்து வந்த அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஹ்ரிஷிதா லஹோன், எதிர்பாராத சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். டெல்லி மைத்ரேயி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து முடித்த இவர், புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 28 அன்று காலை 10 மணியளவில், ஆசிரமம் மேம்பாலம் பகுதியில் அவர் வாடகை இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது, பின்னால் வந்த டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்தும் அதன் ஓட்டுநரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் இரவு உணவிற்காகச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த இளம் பெண், அதற்கு முன்பாகவே விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையேயும் நண்பர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in