ச்சீ வாந்தியே வருது.! பிரபல உணவகத்தில் கழிவறையில் கழுவப்படும் பாத்திரங்கள்… கொஞ்சம் கூட அறிவே இல்லையா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ச்சீ வாந்தியே வருது.! பிரபல உணவகத்தில் கழிவறையில் கழுவப்படும் பாத்திரங்கள்… கொஞ்சம் கூட அறிவே இல்லையா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நியூ டெல்லி ஸ்வீட்ஸ்’ உணவகத்தின் ஊழியர்கள், சமையல் செய்யப் பயன்படுத்தும் பெரிய பாத்திரங்களை கழிவறைத் தரையில் வைத்துத் தூய்மைப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது. வாடிக்கையாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, ஹோட்டல்களின் தூய்மை மற்றும் சுகாதார நிலை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடுமையான விவகாரம் குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, ஹோட்டலில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகவே மாற்று ஏற்பாடாக, அவசரகால நடவடிக்கையாக மட்டுமே கழிவறையில் பாத்திரங்கள் கழுவப்பட்டதாக விசித்திரமான விளக்கமளித்துள்ளனர். இருப்பினும், இந்தத் தகவல் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், பொதுச் சுகாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தச் சம்பவத்தை மிகத் தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு எதிராக அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இத்தகைய கடுமையான சுகாதார மீறல் மற்றும் அலட்சியப்போக்கு நிரூபிக்கப்பட்டால் உணவகத்தின் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in