LATEST NEWS
“55 துப்புரவுப் பணியாளர்கள் இருக்காங்க.. ஆனா நோயாளி தாயை வைத்தே செய்த காரியம்..” அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.. காட்டுத்தீயாகப் பரவும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ அரசு மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்று வரும் பச்சிளம் குழந்தையின் ஏழைத் தாயை மருத்துவமனைத் தரையைத் துடைக்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே சுமார் 55 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பளத்திற்காக ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு வரும் வேளையில், தங்களுக்குப் பதிலாக ஒரு நோயாளியின் தாயைக் கொண்டு தரையைச் சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.
தன்னுடைய மாற்றுத்திறனாளி மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க வந்த அந்தத் தாய், மருத்துவமனை ஊழியர்களின் கட்டாயத்தால் தரையைத் துடைக்கும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கு மற்றும் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
