அடக்கடவுளே..! காதல் திருமணம் செய்த சில ஆண்டுகளில் நேர்ந்த சோகம்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி.. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கணவன் தலைமறைவு..! பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! காதல் திருமணம் செய்த சில ஆண்டுகளில் நேர்ந்த சோகம்… தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி.. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கணவன் தலைமறைவு..! பரபரப்பு பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹோசயலநாடு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆஷா என்ற பெண் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 13 அன்று நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இந்து அமைப்புகள் இதனை ‘லவ் ஜிகாத்’ வழக்கு என்று கூறி தீவிர விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைந்த ஆஷா, அதே பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பஸ் ஓட்டுநரான இம்ரான் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது, மேலும் இவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இந்த திடீர் சோகம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

ஆஷா தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது கணவர் இம்ரான், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆஷா இறந்துவிட்ட செய்தி அறிந்தவுடன் இம்ரான் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இதனிடையே, வரதட்சணை கேட்டு தனது மகளைக் கொன்றுவிட்டு, அதனைத் தற்கொலை போல் சித்தரிக்க கணவர் இம்ரான் தூக்கில் தொங்கவிட்டதாக ஆஷாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெற்றோரின் புகாரையும், இந்து அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று ஹிரியூர் நகர காவல்துறையினர் (Hiriyur Police) வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in