CRIME
சொந்த அப்பன் செய்யுற காரியமா இது..? தாயை இழந்த 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… கதறியும் விடாத தந்தை… தஞ்சையில் அதிர்ச்சி..!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், தனது மனைவியை இழந்த எம்.பிரகாஷ் (36) என்பவர், 10 வயதுடைய சொந்த மகளுக்கே உரிய பாதுகாப்பை வழங்காமல், கடந்த செப்டம்பர் 8 முதல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, தன்னுடைய உறவினர்களிடம் உண்மையைச் கூறவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தந்தை பிரகாஷை அதிரடியாகக் கைது செய்தனர். சொந்த மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
