அடக்கொடுமையே.. சொந்தத் தாயே விற்க முயன்ற அவலம்.. தப்பி வந்த பெண்ணைச் சூழ்ந்து கொண்ட காம மிருகங்கள்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. சொந்தத் தாயே விற்க முயன்ற அவலம்.. தப்பி வந்த பெண்ணைச் சூழ்ந்து கொண்ட காம மிருகங்கள்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தில், தன் சொந்தத் தாயால் விற்கப்பட முயன்று தப்பிய இளம் பெண் ஒருவர், உதவி செய்வதாகக் கூறி கடத்தப்பட்டு இருவரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த அந்தப் பெண்ணை, அவரது தாய் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பித்துத் தனது சொந்த ஊரான புலந்தஷாருக்கு வந்து தங்கியிருந்த பெண்ணை, டெல்லிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி முன்பே அறிமுகமான ஷஃபிக் மற்றும் பூரா என்ற இரு நபர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளனர். குர்ஜா தேஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அப்பெண், இருவரும் செய்த அத்துமீறலை எதிர்த்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரோடு கால்வாயில் தள்ளிவிடப்பட்டுள்ளார்.

கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, டயல் 112 அவசர உதவிக் குழுவினர் சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட காவல் துறையினர், வெறும் 12 மணி நேரத்திற்குள் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி இரு குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர்; இதில் ஒரு குற்றவாளி நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலுக்குப் பிறகு பிடிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு நீதிமன்ற வாக்குமூலம் பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அந்தரிக்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும், சாதுரியமாகச் செயல்பட்டுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ் குழுவினருக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in