“ஸ்டாலினை குறிவைக்கிறாங்கனு அப்பவே சொன்னேன்… யாருமே கண்டுக்கல…”அமைச்சர் சேகர்பாபுவை அதிரவைத்த திருமாவளவன் பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினை குறிவைக்கிறாங்கனு அப்பவே சொன்னேன்… யாருமே கண்டுக்கல…”அமைச்சர் சேகர்பாபுவை அதிரவைத்த திருமாவளவன் பேச்சு..!!

Published

on

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமடைந்தபோதே, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் முன்கூட்டியே உணர்ந்தேன். இது தொடர்பாக அப்போதே அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் எச்சரித்து, விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்திக் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி மூலமாக கொளத்தூர் தொகுதியில் திட்டமிட்டுப் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தேர்தல் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று குற்றம்சாட்டினார். இது குறித்து தான் சுட்டிக்காட்டியபோது, சேகர்பாபு உட்பட பலர் தனது எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டதாக திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

Advertisement

மேலும், “நான் யாரையும் விமர்சிப்பதற்காகவோ அல்லது குற்றம் சொல்வதற்காகவோ இதை இங்கே பதிவு செய்யவில்லை” எனக் குறிப்பிட்ட திருமாவளவன், கூட்டணியில் சிறு சலசலப்புகள் இருந்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ‘ஸ்டாலின் அண்ணன்’ என்று அன்போடு அழைத்து, தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட நகர்வுகளை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in