CRIME
“கொலை இல்ல தற்கொலை..” சுவரில் ஒட்டப்பட்ட மர்ம எழுத்துக்கள்… பூஜா தத்தா வழக்கில் கிளைமாக்ஸ்.. தடயவியல் ஆய்வகம் வெளிப்படுத்திய திடுக்கிடும் உண்மை..!!
பெங்களூருவில் வசித்து வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த 34 வயது தொழில்நுட்ப வல்லுநர் பூஜா தத்தாவின் மர்ம மரண வழக்கு இறுதியாகத் தீர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27, 2026 அன்று அடுகோடி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஒரு வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் அவரது நிர்வாண உடலைக் கண்டெடுத்தனர். சுவர்களில் சில எழுத்துக்கள் ஒட்டப்பட்டிருந்ததாலும், ஒரு இளைஞர் வீட்டிற்கு வந்து சென்றதாலும் இச்சம்பவம் தொடக்கத்தில் பெரும் கொலைச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், அடுகோடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தடயவியல் ஆய்வக இறுதி அறிக்கையின் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பூஜா தத்தாவின் நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகியிருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட நுரையீரல் செயலிழப்பால் அவர் இயற்கையாகவே உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த ஒரு இளம் தொழில்நுட்ப ஊழியரின் இந்த மரணம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு வழக்கில் இருந்த கொலை யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
