CRIME
ஐயோ கொடுமையே.. காரில் கடத்திச் சென்று சிறுமிக்கு நடந்த கொடூரம்.. துணியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்..!!
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின்படி, மூன்று பேர் அவரை காரில் கடத்திச் சென்று டெல்லி-மும்பை விரைவுச்சாலை அருகே வைத்து மாறிமாறி பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் ஒரு இறந்த பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பின்னர் அந்தப் பச்சிளம் குழந்தையைத் தன் துணிகளுக்குள் மறைத்துவைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்; அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்டத் தகவலின்படி, சிறுமி ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் அஜய் குமார் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் மூன்று பேர் அவரை காரில் கடத்திச் சென்று கலெக்டரேட் சௌக் பகுதியில் இறக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். அங்கு ஒருவரின் உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறினார். இதற்கிடையே, ஒரு சிசிடிவி காட்சியில் அனில் என்ற நபர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டுச் செல்வது பதிவாகியுள்ளது. அந்தச் சந்தேகத்திற்குரிய இளைஞரைத் தடுத்து வைத்துள்ள போலீசார், அவருக்கும் சிறுமிக்கும் இடையே காதலுறவு இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குந்தன் கன்வரியா உத்தரவின் பேரில் பல்வேறு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வரும் போலீசார், பலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த குழந்தையின் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளதோடு, வழக்கில் உண்மையை வெளிக்கொணரச் சந்தேக நபர்களின் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
