LATEST NEWS
“சினிமால கூட இப்படி காட்ட மாட்டாங்க… கல்யாணமான கையோடு கணவர் வீட்டிற்கு 18 கி.மீ நடந்த புதுப்பெண்…” இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் புல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும், உண்டாவா கிராமத்தைச் சேர்ந்த அனில் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஜவுன்சார்-பவார் பகுதியில் உள்ள பாரம்பரிய வழக்கப்படி, மணமகன் வீட்டிற்குப் பதிலாக மணமகளே உறவினர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று கணவர் வீட்டை அடையும் சடங்கு பின்பற்றப்படுகிறது. அதன்படி திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் வீட்டிற்குச் செல்வதற்காக ஷர்மிளா புறப்பட்டார்.
ஆனால், அந்த வழித்தடம் முழுவதும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான மலைப் பாதையாக இருந்தது. இதனால் வாகன வசதிகள் ஏதுமின்றி, மணப்பெண் ஷர்மிளாவும் அவரது உறவினர்களும் சுமார் 18 கிலோமீட்டர் தூரமுள்ள தொலைவை அடைவதற்காக இரண்டரை முதல் மூன்று மணி நேரம் வரை நடந்தே செல்லும் கட்டாயம் ஏற்பட்டது. பாரம்பரியமான இந்தத் திருமண நிகழ்வில், மலைக்கிராம மக்கள் படும் துயரமும் இதில் வெளிப்பட்டது.
தங்கள் கிராமத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் அவசர தேவைகளுக்குக் கூட நீண்ட தூரம் நடந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இனியும் பொதுமக்கள் இதுபோன்று அவதிப்படாமல் இருக்க, உண்டாவா கிராமத்திற்கு விரைவாக சாலை வசதியை ஏற்படுத்தித் தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு மணப்பெண் ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், திருமணக் கோலத்தில் இளம்பெண் நடந்து செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
