CRIME
அடக் கொடுமையே.. கள்ளக்காதலுக்கு முள்ளாக இருந்த கர்ப்பிணி நாத்தனார்.. நகைகளை அடகு வைத்து அரசு செவிலியர் போட்ட பயங்கர ‘ஸ்கெட்ச்’.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கர்ப்பிணி நாத்தனாரை, அரசு செவிலியர் ஒருவர் 3 லட்ச ரூபாய் கூலிப்படைக்குக் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் அரசு மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்த பூர்ணிமா விஸ்வகர்மா என்ற அரசு செவிலியர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார். இதற்காகத் தனது நகைகளை அடகு வைத்து, முன்பணமாக 2.5 லட்ச ரூபாயைக் கூலிப்படையினருக்குக் கொடுத்துள்ளார்.
அக்டோபர் 24ஆம் தேதி நள்ளிரவு, செவிலியர் பூர்ணிமாவின் தூண்டுதலின் பேரில் அரசு குடியிருப்புக்குள் புகுந்த கூலிப்படையினர், அவரது கர்ப்பிணி நாத்தனாரான குடியா என்பவரைத் தொண்டையை நெரித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், சுத்தியலால் அவரது தலையில் பலமாக அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கொலை நடந்த பின்னர், தனக்கு எதுவுமே தெரியாதது போல செவிலியர் பூர்ணிமாவே காவல்துறையினருக்குத் நாடகமாடித் தகவல் கொடுத்துள்ளார். தொடக்கத்தில், உயிரிழந்த பெண்ணின் தாய் இது வரதட்சணைத் கொடுமையால் நடந்த கொலை எனப் புகார் அளித்ததால், செவிலியர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின் காவல்துறையினருக்குச் செவிலியர் பூர்ணிமா மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால் கூலிப்படை வைத்து நாத்தனாரைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திங்கட்கிழமை இரவு இக்கொலை வழக்கில் தொடர்புடைய ராமஆசிஷ் யாதவ் என்ற கூலிப்படை குற்றவாளியைக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதலுக்காகக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
