அம்மாடியோ.. பூமிக்கு அடியில் 3 டிரம் நிறைய ரூ.500 கட்டுக்கள்.. கிராமத்தின் கரண்ட்டை கட் பண்ணி போலீஸ் நடத்திய பகீர் ஆபரேஷன்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மாடியோ.. பூமிக்கு அடியில் 3 டிரம் நிறைய ரூ.500 கட்டுக்கள்.. கிராமத்தின் கரண்ட்டை கட் பண்ணி போலீஸ் நடத்திய பகீர் ஆபரேஷன்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியின் பரைபூர் ராம்நகர் கிராமத்தில், வீடு ஒன்றில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் டிரம்ளிலிருந்து கட்டுக் கட்டாக ரூ.500 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி சுமார் ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், அந்த வீட்டில் ரூ.60 கோடி வரை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. ரகசியத் தகவலின் அடிப்படையில் கங்கா நகர் துணை ஆணையர் சோனம் குமார் மற்றும் கூடுதல் துணை ஆணையர் ஆகியோர் தலைமையில், புதன்கிழமை மாலை கிராமத்தின் மின்சாரத்தைத் துண்டித்து, 40-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வீட்டைச் முற்றுகையிட்டு அதிரடித் தோண்டுதல் பணியை மேற்கொண்டனர்.

இந்த பிரம்மாண்டப் பணப்புதையல் கண்டெடுக்கப்பட்ட வீடு ராகேஷ் யாதவ் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது . இது தொடர்பாக அந்த வீட்டைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் காவலில் எடுத்துள்ளதோடு, வீட்டை முழுமையாக சீல் வைத்துள்ளனர். தற்போது வருமான வரித்துறையினர் பணத்தை எண்ணும் இயந்திரங்களை வரவழைத்து நோட்டுகளை எண்ணி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்பு புனேயில் வேலை செய்து வந்ததாகவும், 2020 லாக்டவுன் சமயத்தில் கிராமத்திற்குத் திரும்பிய பின்னர் திடீரென ஏராளமான நிலங்களையும் டிராக்டர்களையும் வாங்கிக் குவித்ததாகவும் கூறப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட ஒரு சாதாரணத் தகராறே இவ்வளவு பெரிய பண ரகசியம் வெளிச்சத்திற்கு வர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in