CRIME
அடக்கடவுளே.. முதுகில் இருந்த சிலிண்டர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
இந்தோனேசியாவில் தெருவோர வியாபாரி ஒருவர், தான் விற்கும் உணவுப் பொருட்களை எப்போதும் சூடாக வைத்திருப்பதற்காக எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பைத் தனது முதுகிலேயே சுமந்து கொண்டு வீதி வீதியாக விற்பனை செய்து வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக, அவர் முதுகில் சுமந்திருந்த அந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, திடீரென கண் இமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து வெடித்தது. இந்த பயங்கர விபத்தின் போது, அந்த வியாபாரி சாமர்த்தியமாகச் செயல்பட்டுத் தனது முதுகில் இருந்த எரியும் அடுப்பு மற்றும் பொருட்களை உடனடியாகக் கீழே தூக்கி எறிந்ததால், மிக நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.
இந்த அதிர்ச்சியூட்டும் வெடிப்புச் சம்பவத்தில், அந்த வியாபாரிக்கு உடலில் சில இடங்களில் மட்டுமே லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. வெடிப்பின் தீவிரம் குறைவாக இருந்ததாலும், அவர் அன்றைய தினம் விற்க வைத்திருந்த உணவுப் பொருட்கள் மற்றும் அடுப்பை உடனடியாகத் தரையில் வீசியதாலும் ஒரு பெரும் பேரழிவு மற்றும் உயிரிழப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பார்ப்போரை அதிர வைக்கும் இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வாழ்வாதாரத்திற்காகத் தெருவோர வியாபாரிகள் தங்களின் உயிரைப் பணையம் வைத்து வேலை செய்யும் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
