CRIME
“இவேளெல்லாம் ஒரு மனுஷியா…” 3 வயது குழந்தையைக் கடித்துக் குதறிய கள்ளக்காதலன்… உடந்தையாக இருந்து தாய் செய்த பச்சைத் துரோகம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
கும்பகோணம் அருகே 3 வயது ஆண் குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்குக் கடித்த யோகராஜ் என்பவரையும், அதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாய் அட்சயாவையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அட்சயாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், யோகராஜுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யோகராஜ் அடிக்கடி வீட்டிற்கு வந்து, குழந்தை மீது இந்த கொடூரத் தாக்குதலையும் சித்திரவதையையும் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இது குறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், யோகராஜ் மற்றும் தாய் ஆட்சயா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
