LATEST NEWS
“நாங்கள் வெஜ் பிரியாணி ஆர்டர் பண்ணோம்.. ஆனா இதுல சிக்கன் இருக்கு..” விமான நிலையத்தில் வெடித்த கடும் மோதல்.. வைரல் வீடியோ..!!
பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வெஜ் பிரியாணியில் சிக்கன் துண்டுகள் இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள ‘டேஸ்ட் ஆஃப் இந்தியா’ என்ற உணவகத்தில் அந்த குடும்பத்தினர் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது, அந்த உணவில் சிறிய சிக்கன் துண்டுகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து பியூஷ் அகர்வால் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோக்கள் மற்றும் விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே தங்களுக்கு சைவ உணவுக்குப் பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதை உணர்ந்த குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். அந்த உணவகத்தின் மேலாளர் மற்றும் சமையல்காரரை வரவழைத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது குடும்பம் மிகவும் கண்டிப்பாக சைவ உணவு முறை பின்பற்றுவதாகவும், குழந்தைகளும் கூட அதில் சிக்கன் இருப்பதை அறியாமல் சாப்பிட்டுவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், இது தங்களது மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து, உணவகத்தின் ஊழியர்களை விமான நிலைய ஊழியர்களும் தட்டிக் கேட்கும் காட்சிகள் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உரிய விசாரணை நடத்தக் கோரியுள்ளனர். தவறு எப்படி நேர்ந்தது என்பதைத் கண்டறிய உணவகத்தின் சிசிடிவி பதிவுகள் மற்றும் ஆர்டர் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
