LATEST NEWS
“எங்களை வலுக்கட்டாயமாக அடைச்சு வச்சுட்டாங்க…” தவெக நிர்வாகி கே.எம்.ஷெரீப் வெளியிட்ட பகீர் வீடியோ.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட முக்கிய நிர்வாகியான கே.எம்.ஷெரீப், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன்னுடன் வந்தவர்களையும் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சரைச் சந்தித்துச் சில கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவர் நேரம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதோடு, ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே அவர்கள் சட்டவிரோதமாகச் சிறைபிடிக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டதாக ஷெரீப் அந்த வீடியோவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
வரவிருக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட கே.எம்.ஷெரீப் விருப்பம் தெரிவித்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு அவருக்கு இத்தகைய அநீதியும் கொடூரமும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
