“விமானத்துல போகாதீங்க..” பண்டிகை காலத்தில் 700% கட்டண உயர்வா..? கேள்வி கேட்டவருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன ஷாக் பதில்..! நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விமானத்துல போகாதீங்க..” பண்டிகை காலத்தில் 700% கட்டண உயர்வா..? கேள்வி கேட்டவருக்கு உச்ச நீதிமன்றம் சொன்ன ஷாக் பதில்..! நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!

Published

on

விமானக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பயணம் சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறிவருவது குறித்துப் பலரும் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.

விமானக் கட்டணங்கள் 700 சதவீதம் வரை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய வக்கீலிடம், உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு கடுமையான தொனியில் பதிலளித்தது. கட்டண உயர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது என்று வக்கீல் வாதிட்டபோது, நீதிபதி “விமானத்தில் பயணிக்காதீர்கள், அடுத்த வழக்கு” என்று சுருக்கமாகக் கூறினார். நீதிமன்றத்தின் இந்த அலட்சியமான பதில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் விமானப் பயணம் என்பது ஆடம்பரமான விஷயம் மட்டுமல்லாமல், அவசர காலங்களுக்கும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் பயன்படும் மிக முக்கியமான சேவையாக மாறிவிட்டது. பண்டிகைக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் விமான நிறுவனங்கள் தங்களது இஷ்டத்திற்குப் பல மடங்கு கட்டணங்களை உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது. சாமானியர்களின் இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டிய நீதித்துறை, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in