LATEST NEWS
“என் ஸ்பேஸ் லேசர் வேலை செய்யல போல..” அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி திடீர் தோல்வி..! கடுப்பில் எலான் மஸ்க் போட்ட நையாண்டி பதிவு..!!
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், தன்னைத்தானே கேலி செய்து கொண்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மஸ்க்கின் இந்தச் சமூக வலைதளப் பதிவு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியை ஆதரிப்பதற்காக எலான் மஸ்க் கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை (சுமார் $474 மில்லியன்) வாரி இறைத்திருந்தார். தேர்தல் பிரசார நிதி வரலாற்றில் தனிநபர் ஒருவரால் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய நிதி உதவியும் குடியரசுக் கட்சியைத் தோல்வியிலிருந்து காப்பாற்ற உதவவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “தேர்தலில் தலையிடும் எனது விண்வெளி லேசர்கள் இந்த முறை வேலை செய்யவில்லை போலிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பரவும் தேர்தல் தலையீடு குறித்த சதித் கோட்பாடுகளைக் கிண்டல் செய்யும் வகையிலும், தனது பெருமளவிலான தேர்தல் நிதி முதலீடு தோல்வியடைந்ததை நையாண்டி செய்யும் வகையிலும் அவர் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
