LATEST NEWS
மதம் மாற மறுத்த மருமகன்.. போதைப்பொருள் கொடுத்து காருக்குள்ளேயே ‘சுன்னத்’ செய்த மாமியார்… மனைவி மீது கணவனின் பரபரப்பு புகார்..!!
ராஜஸ்தானைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்ற இளைஞர், மதம் மாற மறுத்ததால் தனது விருப்பத்திற்கு மாறாக காருக்குள் போதைப்பொருள் கொடுத்து ‘சுன்னத்’ செய்யப்பட்டதாக அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள பங்காகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அவரது மாமியார் நூர் காதுன் (36) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், பெங்களூருவில் இருக்கும் அவரது மனைவி நூர்ஷிகா பேகத்திடமும் (24) விசாரணை நடத்தப் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அகில் குமாருக்கும் நூர்ஷிகா பேகத்திற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அசாமில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த இவர்களது வாழ்க்கையில், அகில் தன் மனைவி சிந்தூர் அணிந்திருந்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்த பிறகு பிரச்சினை தொடங்கியுள்ளது. நூர்ஷிகாவின் குடும்பத்தினரும் கிராம மக்களும் அகிலை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் குடும்பப் பிரச்சினையைப் பேசலாம் என அசாமுக்கு வரவழைக்கப்பட்ட அகிலை, ஜலுக்பாரி பகுதியில் இருந்து காரில் கடத்திச் சென்றுள்ளனர். குவஹாத்தி டிவி டவர் அருகே தனிமையான இடத்திற்குச் சென்று, அவருக்கு போதைப்பொருள் கொடுத்து விருப்பத்திற்கு மாறாகக் காருக்குள்ளேயே சுன்னத் செய்துள்ளனர். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடவும், பெயரை மாற்றிக் கொள்ளவும் கட்டாயப்படுத்தியதாக அகில் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அசாம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
