LATEST NEWS
“மக்களே உடனே கிளம்புங்க..” இன்று ரேஷன் கடைகள் இயங்கும்..! தீபாவளிக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மக்கள் எவ்வித சிரமமும் இன்றி ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ரேஷன் கடைகள் இன்று இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.
எனினும் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அரிசி, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தடையின்றிப் பெறுவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருள்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது சிரமங்கள் இருந்தால் பொதுமக்கள் 1967 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
