“பயமா இருக்கு…” அம்மாவும் அவரும் சேர்ந்து… வளர்ப்பு தந்தை செய்த கொடூரம்… வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பயமா இருக்கு…” அம்மாவும் அவரும் சேர்ந்து… வளர்ப்பு தந்தை செய்த கொடூரம்… வீட்டை விட்டு ஓடிய சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த 3-ஆம் தேதி ‘சைல்டு ஹெல்ப் லைன்’ மையத்திற்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொலக்கொம்பை காவல்துறையினர், சிறுமியைத் தீவிரமாகத் தேடி மீட்டு உதகை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். அங்குச் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி உண்மைகள் வெளியாயின.

சிறுமியின் தந்தை அவரைப் பிரிந்து சென்ற நிலையில், தாய் ராணி (47) என்பவர் நடராஜ் (55) என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு பள்ளி விடுமுறையின் போது நடராஜ் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியுள்ளார். இது குறித்துத் தாயிடம் சிறுமி அழுது முறையிட்டபோதும், நடராஜ் குடும்பச் செலவுக்குக் கூடுதல் பணம் கொடுத்ததாலும், தாய்க்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததாலும் அவர் மகளின் நிலையைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து நடந்த கொடுமைகளாலும் பயத்தின் உச்சத்தாலும் சிறுமி வீட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன்பானு தலைமையிலான காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியைச் சீரழித்த வளர்ப்புத் தந்தை நடராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ராணி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in