அடக்கடவுளே.. சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு எமனாக வந்த கார்.. ஜீப்பிற்கு அடியில் சிக்கிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. சாலையோரம் நடந்து சென்ற பெண்ணுக்கு எமனாக வந்த கார்.. ஜீப்பிற்கு அடியில் சிக்கிய கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் நலகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது பயங்கரமாக மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த ஜீப் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் வேகத்தில் அந்த ஜீப் தலைகீழாகக் கவிழ்ந்து, அருகில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, கவிழ்ந்த ஜீப்பிற்கு அடியில் சிக்கியிருந்த அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், விபத்தில் சிக்கிய அந்தப் பெண்ணின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நலகர் காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in