“நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய கார்..” குறுக்கே தன் காரை விட்டு நிறுத்திய இளைஞர்! உள்ளே எட்டிப் பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. வெளியான நெகிழ்ச்சி காரணம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நடுரோட்டில் தறிகெட்டு ஓடிய கார்..” குறுக்கே தன் காரை விட்டு நிறுத்திய இளைஞர்! உள்ளே எட்டிப் பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி.. வெளியான நெகிழ்ச்சி காரணம்..!!

Published

on

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ஹாம்ப்ஸ்டெட் சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று சீராக செல்லாமல் வலது மற்றும் இடது புறமாக மாறி மாறி சென்றது. இதனால் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பலரும் தொடர்ந்து பலத்த ஹாரன் சத்தம் எழுப்பியபடி சென்றனர். இதனை ஸ்காட் ஹாலண்ட் என்ற வாலிபர் தனது வாகனத்தில் வந்தபோது கவனித்தார். உடனே அவர் மற்ற வாகனங்களை முந்திச் சென்று அந்த காரை நெருங்கிப் பார்த்தபோது, ஓட்டுநர் இருக்கையில் 91 வயது முதியவர் ஒருவர் திணறியபடி காரை ஓட்டிக் கொண்டிருப்பதை அறிந்தார்.

நிலைமையை உடனடியாகப் புரிந்து கொண்ட ஸ்காட், பெரிய விபத்து ஏதும் நேராதிருக்க தனது காரை அந்த வெள்ளை நிற காரின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினார். அந்த வாகனத்தின் பின்புறத்தில் முதியவரின் கார் மோதி நின்றது; இதனால் இரண்டு சாலைகள் பிரிய உள்ள பகுதிக்குள் கார் நுழைவது தடுத்து நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் காரில் இருந்த பீட்டர் லடாஸ் என்ற அந்த முதியவர் மீட்கப்பட்டு, ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் குணமடைந்து வருவதாக அவரது மகள் தெரிவித்தார். இதன்பிறகு ஸ்காட்டும் முதியவரை நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்து அறிந்தார். ஆபத்தை உணர்ந்து முதியவரின் காரை தடுத்து நிறுத்தி உயிரைக் காப்பாற்றிய ஸ்காட்டின் செயலை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வெகுவாகப் பாராட்டினர். மேலும், தெற்கு ஆஸ்திரேலிய முதல்-மந்திரி பீட்டர் மலினாஸ்காசும் ஸ்காட்டை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in