LATEST NEWS
அதிர்ச்சியில் உறைந்த திருப்பத்தூர்..! பட்டப்பகலில் நடந்த கொடூர இரட்டைக் கொலை… வெளியான பகீர் தகவல்..!!
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகர் காலிமனையில், ஆண் மற்றும் பெண் என இருவர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய கொலையாளிகளைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க ஆண் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. அவருடன் கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரட்டைக் கொலையைச் செய்த மர்மக் கும்பல் யார் மற்றும் கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்
