GALLERY
தனது மகன் முன்பு மாஸ் காட்டிய நடிகர் அஜித்.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் ..

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் நடிக்கிறார்; மற்ற நேரங்களில் அஜித் நேரம் செலவிடுவது குடும்பம் மற்றும் பைக் ரேஸ்களுடன் தான்.சமீபத்தில் சாகச பிரியர்களுக்காக ஏகே மோட்டோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகின. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த சமயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக துபாயில் ஷாலினி உடன் ஆனந்தமாக பொழுதை கழிக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் சென்னையில் உள்ள விளையாட்டு அரங்கில் குழந்தைகள் முன்பாக கால்பந்து விளையாடும் போட்டோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சென்னையில் எஸ்சி அணியில் கலந்து கொண்டு விளையாடும் வீடியோ வெளியானது.
தற்போது, ஆத்விக் மற்றும் அவரது நண்பர்கள் முன்னிலையில் நடிகர் அஜித் கால்பந்து விளையாட்டை விளையாடி அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் காட்டுத்தீ போல ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.