துபாயில் மனைவியுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்கும் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் .. - cinefeeds
Connect with us

GALLERY

துபாயில் மனைவியுடன் ஆனந்தமாக பொழுதை கழிக்கும் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் ..

Published

on

எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் தனி ஆளாக சினிமா துறையில் முன்னேறி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி  டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித்; சினியுலகில்  அதிக ரசிகர் பட்டாளத்தைக்  கொண்ட நடிகராக முத்திரை பதித்தவர்.

ரசிகர்கள் அனைவரும் இவரை தல அஜித்; அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஏ கே என்றும் அழைக்கிறார்கள்.  இவர், தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து, காதல் கோட்டை, காதல் மன்னன், ஆசை, வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

2013ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகராக தல அஜித் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகள், ஆத்விக் என்ற மகன்  உள்ளார்கள்.

நடிகர் அஜித் சினிமா துறையில் மட்டுமில்லாமல் ரேஸ்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்; இவர் பல கார்  ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள 62 ஆவது படம் விடாமுயற்சி.

Advertisement

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து கொண்டிருக்கின்றது; இந்த நிலையில் துபாயில் உள்ள நடிகர் அஜித் உடன் இணைந்து அஜித் ரசிகர்கள் பலரும் புகைப்படத்தை  எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்விட்டரில் பக்கத்தில் அஜித் குமார் ஆர்மி என்ற  குரூப்பில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் அனைவரும் லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in