GALLERY
காதல் மனைவியுடன் அழகாக போஸ் கொடுத்த நடிகர் நகுல்.. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

நடிகர் நகுல் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் நடிகை தேவயாணியின் உடன் பிறந்த சகோதரர் ஆவர்.
முதன் முதலாக நகுல் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நகுல் சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு அகீரா என்ற மகளும், அமோர் என்ற மகனும் இருக்கின்றனர்.
நடிகர் நகுல் அந்நியன், கஜினி, காதலில் விழுந்தேன், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடலை பாடியுள்ளார்.
நகுல் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. அவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நகுல் அடிக்கடி தனது குழந்தைகள் செய்யும் சேட்டை வீடியோக்களை பதிவிடுவார். மேலும் பாட்டுப்பாடியும் வீடியோக்களை பதிவிடுவார்.
தற்போது நகுல் தனது மகன், மகளுடன் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.