Singer Bhavatharani unseen photos| பவதாரணி குடும்ப புகைப்படங்கள்
Connect with us

GALLERY

இசைஞானியின் அன்பு மகளா இது..? குடும்பத்துடன் இருக்கும் மறைந்த பாடகி பவதாரணி.. பலரும் பார்க்காத புகைப்படங்கள் இதோ..!!

Published

on

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பாடியதற்காக அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது.

கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியான மைடியர் குட்டி சாத்தான் என்ற மலையாள திரைப்படத்தில் திதிதே தாளம் என்ற பாடலை பாடினார்.  இதன் மூலம் பவதாரணி பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.

Advertisement

இதனை தொடர்ந்து ராசையா, அலெக்ஸாண்டர், காதலுக்கு மரியாதை, தேடினேன் வந்தது, ஃபிரண்ட்ஸ், தாமிரபரணி, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இடம்பெற்ற பாடலை பவதாரணி பாடியுள்ளார்.

இவர் பிர் மிலேங்கே, அமிர்தம், இலக்கணம், மாயநதி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  கடந்த 5 மாதங்களாக புற்றுநோய் பவதாரணி சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

Advertisement

ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரணி இலங்கை சென்ற நிலையில் அங்கு கடந்த 25-ஆம் தேதி மாலை 5:20 மணிக்கு உயிரிழந்தார். நேற்று பவதாரணியின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

தியாகராய நகர் முருகேசன் தெருவில் இருக்கும் இளையராஜாவின் இல்லத்தில் பவதாரணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Advertisement

இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணையபுரம் கிராமம் லோயர்கேம்பில் இருக்கும் முல்லை பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா குறுகிருபா வேத பாடசாலை ஆசிரமம் கட்டியுள்ளார்.

அங்கு பவதாரணி உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே பவதாரணி உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Advertisement

இந்நிலையில் பவதாரணி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சிறு வயதில் பவதாரணி இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in