GALLERY
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா”.. மகனுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ..!!

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகளும், விஜய் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இதனை அடுத்து சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களிலும் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகனாக வளர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவனுடன் இணைந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.
இதனை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அந்த படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஆதிதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த 96 படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி சாய் ரா நரசிம்மர் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து சிந்துபாத் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றி பெறவில்லை.
தற்போது சூர்யா சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் pheonix வீழான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடன் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.