GALLERY
“எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு”.. அன்பு மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரசன்னா-சினேகா தம்பதியினர்.. வைரலாகும் கியூட் Family photos..!!

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை சினேகா.
இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், புதுப்பேட்டை, உன்னை நினைத்து, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
முன்னதாக 2001-ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகு சினேகா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
பிரபல நடிகர்களான விஜய், தனுஷ், கமல் ஹாசன் ஆகியோருடன் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சினேகா முதல் முறையாக நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தார்.
அதன் பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு விகான் என்ற மகனும் ஆத்தியாந்தா என்ற மகளும் இருக்கின்றனர்.
கடந்த 24 ஆம் தேதி நடிகர் பிரசன்னா சினேகா தம்பதியினர் தங்களது மகளின் க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எங்களுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு நீதான் என கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆத்யாந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title