TRENDING
ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. ஒரே வருடத்தில் விவாகரத்து.. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பதிவிட்ட வீடியோ வைரல் ..

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரண் . இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்களில் கம்பிரமான தோற்றத்தையே கொண்டுள்ளார். இவருக்கு திப்பு சுல்தான் என்ற ஒரு மகன் இருக்கிறார். மேலும் இந்து மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்தார்; அவள் பெயர் ஜீவத் பிரியா.
ப்ரியா முகநூல் மூலம் சீரியல் நடிகர் முகேஷ் ராஜை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த ராஜ்கிரண் ப்ரியாவிடம் அவன் நல்ல நோக்கத்தோடு உன்னிடம் பழகவில்லை அவன் உனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் பிரியா 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் முகேஷ் ராஜை ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணம் குறித்தும் பல விமர்சனங்கள் வந்த நிலையில் இது பற்றி பேட்டியில் கேட்டபோது ராஜ்கிரண் நான் சொந்த மகளாகவே பிரியாவே நினைத்தேன்; அவள் எனக்கு இப்படி துரோகம் செய்வாள் என்று நினைக்கவே இல்லை என்று கூறினார். மேலும், அவள் என்னுடைய வளர்ப்பு மகள் என்ற உண்மையை உடைத்தார்.
மேலும், முகேஷ் ராஜ் பிரியாவை உண்மையாக காதலிக்காமல் ராஜ்கிரனின் சினிமா செல்வாக்கை பயன்படுத்துவதற்காகவே பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று ராஜ்கிரண் கூறினார். தற்போது ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் ஜீவத் பிரியா இணையதளத்தில் வளர்ப்பு அப்பாவான ராஜ் கிரனிடம் மன்னிப்பு கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் ராஜ்கிரன் அப்பாவை மீறி சீரியல் நடிகர் முகேஷ் ராஜை திருமணம் செய்து கொண்டேன். திருமணமான 1 வருடத்திலேயே நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்றும்; எங்களது திருமணம் சட்டபூர்வமானது அல்ல என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த திருமணத்தின் மூலம் நான் என்னை வளர்த்த ராஜ்கிரன் அப்பாவை பல முறை காயப்படுத்தி இருக்கிறேன்.
மேலும், பல நேரங்களில் வருத்தம் அடையவும் செய்து விட்டேன் இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக ராஜ்கிரன் அப்பா தான் வருவார். நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள் அப்பா என்று கண்ணீர் மல்க கேட்டு கொண்ட விடியோவை தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா வெளியிட்ட வீடியோ#Rajkiran #Priya #RajKirandaughter https://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/BaehUfdrRG
— Dinamalar (@dinamalarweb) February 1, 2024